வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு
மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார் என்றும், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.