தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-28 19:00 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் வாழ்வாதார கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அய்யப்பன் வரவேற்று பேசினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷர்மிளா, வருவாய் துறை அலுவலர் சங்கம் மனோகரன், கிராம உதவியாளர் சங்கம் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டி.ஏ. சரண்டரை உடனே வழங்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 115, 152-ஐ ரத்து செய்ய வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் 41 மாதத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சத்துணவு துறை, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகத்திற்கு முன்பாக நகராட்சி அலுவலர் சங்க மாநில செயலாளர் எஸ்தர் ஷோபா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்