தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஒருங்கிணைந்த நிதி திட்டத்தை கைவிட கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தில் (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.) அரசின் வரவு, செலவு மற்றும் அரசு ஊழியர் தொடர்பான விவரங்களை கணினி மயமாக்கல் செய்வது என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணி தனியார் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டு உள்ளது. இணையதள பிரச்சினை காரணமாக பணி செய்ய முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அந்த திட்டத்தை கைவிட வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊட்டியில் மாவட்ட கருவூலக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்தன் கோரிக்கைளை விளக்கி பேசினார். இதில் கூடலூர் வட்ட செயலாளர் சிவபெருமாள், புள்ளியியல் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் அற்புதராஜ், மாவட்ட தலைவர் சலீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.