தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஆண்டு கொடி ஏற்று விழா
கோவில்பட்டியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஆண்டு கொடி ஏற்று விழா நடந்தது.
கோவில்பட்டி:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 40-ம் ஆண்டு கொடியேற்று விழா கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. மாவட்ட துணை தலைவர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் உமாதேவி சங்க கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் சுப்பையா, நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க மாநில செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், கால்நடை ஆய்வாளர் சங்க சுப்பிரமணியன், நிர்வாகிகள் நவநீத கண்ணன், ஜெய்சித்ரா, கோமளவல்லி, கிருஷ்ணப்பிரியா, செல்லச்சாமி, பாண்டி, ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட துணை தலைவர் சின்னத்தம்பி, பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு வட்டச் செயலாளர் பிரான்சிஸ் ஆகியோரும் சங்க கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.