தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்

அரக்கோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-17 17:58 GMT

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் வட்டக் கிளை கூட்டம் அரக்கோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைத் தலைவர் ஆர்.வரதராஜன் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் பெரியசாமி, அன்புசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமுர்த்தி, மாநில துணைத் தலைவர் டி.குப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கிளை செயலாளர் நரசிம்மலு, செயல் அறிக்கையையும், பொருளாளர் வி.என்.பார்த்தீபன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட, வட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்