தமிழக மீனவர்கள் கைது - ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்த போராட்டம்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுவிக்க வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.;
ராமேஸ்வரம்,
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுவிக்க வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்ததுடன், ஒரு விசைப்படகையும், 6 பேரையும் சிறை பிடித்தனர். தொடர்ந்து மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மீனவர்களின் சிறை பிடிப்பை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை.