தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஊர்வலம்

நாகையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர்.

Update: 2023-03-16 18:45 GMT

நாகையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஊர்வலம் நடந்தது. பாரதீய கிசான் யூனியன் தேசிய தலைவர் ராகேஷ் திகாயத் தலைமை தாங்கினார். டெல்லி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பாளர் யுத்வீர் சிங் முன்னிலை வகித்தார். நாகை தம்பித்துரை பூங்காவில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாநாடு நடக்கும் தனியார் திருமண மண்டபத்தை அடைந்தது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு, சி.பி.சி.எல். ஆலை விரிவாக்கம் என்ற பெயரில் நாகை மாவட்டத்தை பெட்ரோல் கெமிக்கல் மண்டலமாக மாற்ற முயற்சி செய்யக்கூடாது. சி.பி.சி.எல். நிலம் எடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு நடப்பு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடற்கரையில் பதிக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்