திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-30 16:19 GMT

திட்டக்குடி, 

திட்டக்குடி நகராட்சியில் ராமநத்தம் - விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும், திட்டக்குடி அண்ணா பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பஸ்களையும் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு, குறு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தயா.பேரின்பம் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட இடத்தில் வேகத்தடை அமைப்பதாக உறுதி அளித்தனர். இதையேற்ற தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்