மாணவ-மாணவிகள் பங்கேற்ற தமிழ்நாடு தின ஊர்வலம்

திண்டுக்கல்லில் நடந்த தமிழ்நாடு தின ஊர்வலத்தில் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2023-07-18 19:30 GMT

திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழ்நாடு தினவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஊர்வலத்தின் போது தமிழ்நாடு தினம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் ஏந்தி சென்றனர். இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு தினம் மற்றும் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை கலெக்டர் பூங்கொடி திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதேபோல் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த புகைப்பட கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள், மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார். இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாநகராட்சி மேயர் இளமதி, மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்