முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந் தேதி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-01-23 05:50 GMT

சென்னை,

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் கூடவுள்ள நிலையில் அதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மேலும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தொழில்துறை, சமூக நலத்துறை, கலால் துறை தொடர்பாக முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந் தேதி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்