தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க வேண்டும்.;

Update: 2023-06-28 18:45 GMT

குத்தாலம்:

பா.ஜ.க. மயிலாடுதுறை முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் மணக்குடி எஸ்.டி.எம்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று (வியாழக்கிழமை) மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் நடைபெறும் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது அவர் மத்திய அரசின் சாதனைகள் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துக் கூறி சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தொண்டர்களும், அனைத்து சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்