பல்லடத்தில் இன்று அண்ணாமலை நடைபயணம்

பல்லடத்தில் இன்று (வியாழக்கிழமை) என் மண் என் மக்கள் நடைபயணத்தை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மேற்கொள்கிறார்.;

Update: 2023-10-18 15:35 GMT

பல்லடம்

பல்லடத்தில் இன்று (வியாழக்கிழமை) என் மண் என் மக்கள் நடைபயணத்தை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மேற்கொள்கிறார்.

நடைபயணம்

தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் இன்று (வியாழக்கிழமை) பல்லடத்தில் நடை பயணத்தை மேற்கொள்கிறார். இன்று மாலை 4 மணிக்கு பல்லடம்- மங்கலம் ரோட்டில் அரசு கல்லூரி முன்பு நடைபயணத்தை தொடங்கிறார். பின்னர் அவர் அங்கிருந்த மங்கலம் ரோடு வழியாக வந்து பாரதிபுரம் வழியாக மாணிக்காபுரம் ரோடு சென்று அங்கிருந்து கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக அண்ணாநகர் மற்றும் மேற்கு பல்லடம் சென்று அங்கிருந்து பஸ் நிலையம் வழியாக நால்ரோடு வந்தடைந்கிறார்.

பொதுக்கூட்டம்

அதன் பின்னர் பல்லடம் கடைவீதியில் பாதயாத்திரை நிறைவு செய்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அண்ணாமலை வருகை முன்னிட்டு பல்லடம் நகர் முழுவதும் பா.ஜனதாவினர் கொடிகள், தோரணங்கள், விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர். இதனால் நகரம் முழுவதும் திரும்பிய திசை எல்லாம் பா.ஜனதா கொடி பறக்கிறது. அண்ணாமலை வருகை முன்னிட்டு பா.ஜனதா வீடு வீடாக சென்று அழைப்பிதழ் அளிப்பது, பொதுமக்களை வரவேற்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்