தமிழிசை சவுந்தரராஜனுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து

தமிழிசை சவுந்தரராஜன் தனது மக்கள் பணிகளைக் களத்தில் இருந்து மீண்டும் தொடர முடிவு செய்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. என அண்ணாமலை தெரிவித்துள்ளார்

Update: 2024-03-20 12:48 GMT

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இன்றைய தினம், மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, மத்திய இணை மந்திரி எல். முருகன் , நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் முன்னிலையில், கட்சியில் மீண்டும் இணைந்துள்ள அக்கா தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை வரவேற்று மகிழ்கிறேன்.

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவராக, மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட்டு, கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்து, பின்னர் தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னராக , இரண்டு மாநில அரசுகளையும் சிறப்பாக வழி நடத்திய அன்பு அக்கா தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், தனது மக்கள் பணிகளைக் களத்தில் இருந்து மீண்டும் தொடர முடிவு செய்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அன்பு அக்கா தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை வரவேற்பதில் பெருமை அடைவதோடு, அவரது ஆற்றல் மிகுந்த அரசியல் அனுபவங்கள், கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்திக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் 

Tags:    

மேலும் செய்திகள்