தமிழ் இலக்கிய பேரவை கூட்டம்
அம்பையில் தமிழ் இலக்கிய பேரவை கூட்டம் நடைபெற்றது.
அம்பை:
அம்பையில் தமிழ் இலக்கிய பேரவை கூட்டம் புலவர் அய்யப்பன் தலைமையில் ஆசிரியர் தின விழாவாக நடைபெற்றது. ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கலையரசு இறை வாழ்த்து பாடினார்கள். கீதா ஆறுமுகம் வரவேற்றார். செயலர் லட்சுமணன் கூட்ட அறிக்கை வாசித்தார். லட்சுமணன் திருக்குறள் விளக்கம் கூறினார். ஆறுமுகம் இன்றைய சிந்தனை வழங்கினார். இளங்கோ நம்மைச் சுற்றி எனும் தலைப்பில் பேசினார். பாரதி கண்ணன் குருவே துணை எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். கவிஞர் பாப்பாக்குடி முருகன், ஆசிரியர் தின வாழ்த்து கவிதை வாசித்தார். கவிஞர்கள் சுப்பையா, மூக்குப்பிறி தேவதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நாறும்பூநாதன் நன்றி கூறினார்.