தமிழர் விடுதலைக்களம் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தமிழர் விடுதலைக்களம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மானூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க 20 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் பல்வேறு காரணங்களைக் கூறி, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்று இடம் தேர்வு செய்து அங்கு கடந்த 2 நாட்களாக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழர் விடுதலைக்களம் மற்றும் கல்லூரி கட்டுமான பாதுகாப்பு குழு சார்பில், நெல்லை வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழர் விடுதலைக்களம் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.