தமிழ் மரபு-பண்பாட்டு பரப்புரை விழா

தமிழ் மரபு-பண்பாட்டு பரப்புரை விழா நடந்தது.;

Update: 2023-02-18 18:43 GMT

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நேற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "மாபெரும் தமிழ் கனவு" நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். "பெண் கல்வியும் சமூக வாழ்க்கையும்" என்ற தலைப்பில் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. சிந்தனைசெல்வன், "உயிர்த் தமிழ்" என்ற தலைப்பில் கவிஞர் அறிவுமதி பேசினர். தொடர்ந்து கருத்துரையில் இருந்தும், தமிழ் பெருமிதம் புத்தகத்தில் பதில் அளித்த, ேகள்வி எழுப்பிய மாணவ-மாணவிகளுக்கு விருது மற்றும் ேகடயம் வழங்கப்பட்டன. ேமலும், கல்வித்துறையின் சார்பாக நான் முதல்வன் திட்டம் குறித்தும், மகளிர் திட்டம், கல்வி கடனுதவி, மாவட்ட முன்னோடி வங்கி, தொழில் வழிகாட்டல், மாவட்ட தொழில் மையம், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட மைய நூலகம் சார்பில் கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது. இதில், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் சீனிவாசன், கல்லூரி மாணவ, மாணவிகள் , ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்