தமிழ் கையெழுத்து போட்டி

வாலாஜா கல்லூரியில் தமிழ் கையெழுத்து போட்டி நடந்தது.;

Update: 2023-09-23 18:10 GMT

ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் வாலாஜா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி தமிழ் துறை இணைந்து மாவட்ட அளவிலான தமிழ் கையெழுத்து போட்டி நடந்தது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்