தமிழக அரசு சார்பில் தமிழ் கனவு நிகழ்ச்சி

தமிழக அரசு சார்பில் தமிழ் கனவு நிகழ்ச்சி;

Update: 2023-02-23 18:45 GMT

குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் சங்கீதா வரவேற்றார். இதில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், கவிஞர் யுகபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் பேசுகையில்,

நல்ல கருத்துக்களை எடுத்துக்கூற தமிழக அரசின் சார்பில் இந்த தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பண்பாட்டினை இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறுவது ஆரோக்கியமான விஷயமாகும். தமிழகம் முழுவதும் 100 கல்லூரிகளில் தமிழரின் மரபு நாகரீகம், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தொழில் வளர்ச்சி, கல்வி, கல்வி புரட்சி, அரசின் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு குறித்த புத்தகம், தமிழ் பெருமிதம் குறித்த கையேடுகள் வழங்கப்படுகிறது. இதனை படித்து பயன்பெற வேண்டும். மேலும் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து இங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையும் பார்த்து பயன்பெற வேண்டும் என்றார்.

இதில் குடவாசல் தாசில்தார் குருநாதன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்