கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழ் கனவு நிகழ்ச்சி
வாணியம்பாடியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழ் கனவு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
வாணியம்பாடி
வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் தமிழக அரசின் தமிழ் மரபு மற்றும் தமிழ் பண்பாட்டு பரப்புரை துறை சார்பில், தமிழ் கனவு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சென்னையை சேர்ந்த கார்த்திகை செல்வன் கலந்து கொண்டு தமிழ் வளர்ச்சி குறித்தும், மாணவ, மாணவிகளின் எதிர்காலங்கள் எவ்வாறு திட்டமிடப்பட வேண்டும் என்பது குறித்தும் பேசினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் கல்வி, பொது அறிவு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் சிறப்பு விருந்தினர் கார்த்திகை செல்வன் ஆகியோர் பதில் அளித்தனர்.
மாணவ- மாணவிகளுகளிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்த மாணவர்களுக்கு சான்றிதழ், புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சுகாதாரத்துறை, வங்கிகள், வருவாய்த்துறை, நூலகத் துறையை சேர்ந்தவர்கள் பல்வேறு கண்காட்சி அரங்குகளை அமைத்து இருந்தனர்.
நிகழ்ச்சியில் இஸ்லாமியா கல்லூரி முதல்வர் முகமது இலியாஸ், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் வாணியம்பாடி பகுதியில் உள்ள பல்வேறு கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.