தமிழ் பேரவை ஆண்டு விழா

சேரன்மாதேவியில் தமிழ் பேரவை ஆண்டு விழா நடைபெற்றது.

Update: 2023-06-13 18:50 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியில் தமிழ் பேரவையின் 60-வது ஆண்டு விழா 3 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் பரதநாட்டியம், கருத்தரங்கு, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

நிறைவு விழாவுக்கு, தமிழ் பேரவை தலைவர் கூனியூர் மாடசாமி தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் பாபநாசம் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. சவுந்திரராஜன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாணவர்களின் குரலிசை, வீணை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மனிதன் வாழ்வில் வெற்றி பெற பெரிதும் துணை நிற்பது பணிவா, துணிவா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்திற்கு ராமச்சந்திரன் நடுவராக இருந்தார். பணிவே என்ற தலைப்பில் மலர்விழி, கார்த்திகா ராஜா ஆகியோரும், துணிவே என்ற தலைப்பில் கணபதி சுப்பிரமணியன், முத்தரசு ஆகியோரும் பேசினர். அமைப்பின் செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்