தாம்பரம் அருகே திருநங்கை கொலை வழக்கில் 2 பேர் கைது
தாம்பரம் அருகே திருநங்கை கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருநங்கை கொலை
தாம்பரம் அடுத்த புதூர் மப்பேடு பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் என்ற தயாளம்மாள் (வயது 50). திருநங்கையான இவர், கடந்த 14-ந் தேதி இரவு வெளியே சென்ற நிலையில் மாயமானார். செல்போனில் தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், அவரை தேடிப் பார்த்தபோது மாம்பாக்கம் பிரதான சாலையில், கோவிலாஞ்சேரி பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி போலீஸ் கமிஷனர் முருகேசன் தலைமையில் விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேர் கைது
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து தலைமறைவாக இருந்த ராமச்சந்திரன் (26), பெரும்பாக்கம், இந்திரா நகர் பகுதியை ராஜாஜி (28) ஆகிய இருவரை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட ராஜாஜி மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.