சேலத்தில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு

சேலத்தில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Update: 2023-07-03 19:44 GMT

சூரமங்கலம்

சேலத்தில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தாலி சங்கிலி பறிப்பு

சேலம் குரங்குசாவடி அசோக் நகரை சேர்ந்தவர் பிரகாசம். இவருடைய மனைவி அனிதா (வயது 37). இவர் நாள்தோறும் நடை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். வழக்கம்போல நேற்று அதிகாலை குரங்குச்சாவடி விநாயகர் கோவில் அருகே நடை பயிற்சி சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், அனிதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். இதில் நிலைதடுமாறிய அனிதா கீழே தவறிவிழுந்தார்.

மேலும் திருடன், திருடன் என கூச்சல் போட்டார். இதையடுத்து அங்கு நடந்து சென்றவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசில் அனிதா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்