கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.;
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஞானப்பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நலத்திட்ட உதவி
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் உருவாக்கப்பட்டு அத்துடன் 18 வகைதொழிலாளர் நலவாரியங்கள் செயல்படுகிறது. இதில் உறுப்பினராக 18வயது முதல் 60 வயதுவரை உள்ள தொழிலாளர்கள் பதிவுசெய்து அரசின் நலத்திட்டத்தை பெறுகின்றனர். இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
3 மாத பயிற்சி
மேலும் கொத்தனார், பற்றவைப்பவர்கள், மின்சாரவேலை, குழாய் பொருத்துனர், மரவேலை மற்றும் கம்பிவளைப்பவர்கள் உள்பட பல தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு கட்டுமான கழகம் மூலம் 3 மாததிறன் பயிற்சி, ஒருவாரகால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 3 மாதகால பயிற்சியில் முதல் மாதம் தையூரில் அமையஉள்ள கட்டுமானக்கழக பயிற்சி நிறுவனத்திலும், 2-வது மாதம் காஞ்சிபுரம் பயிற்சி நிலையத்திலும் பயிற்சி அளிக்கப்படும். .பயிற்சியை பெற உள்ளவர்கள் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சிகட்டணம், உணவு, தங்கும் இடம் இலவசம்.
ரூ.800 வழங்கப்படும்
பயிற்சிபெறுவோருக்கு எல் அண் டி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தலா ரூ.800 வழங்கப்படும். இத்தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும்.
விண்ணப்பம்
எனவே, மயிலாடுதுறை. மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் மயிலாடுதுறை வேலாயுதம் நகர் (ரத்னா தியேட்டர் அருகில்) உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகபாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.