ஆதனூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள்

ஆதனூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே தனித்திறன் போட்டி நடைபெற்றது.

Update: 2022-12-15 16:39 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி அளவில் மாணவர்கள் இடையே திறன் மேம்பாட்டு போட்டி பள்ளி தலைமை ஆசிரியர் திரிலோக சந்திரன் தலைமையில் நடந்தது. மற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேசவன், முருகன், வெங்கடேசன், ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் தண்டாயுதபாணி, உடற்பயிற்சி ஆசிரியர் நேரு பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சிவானந்தம் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சாகச நிகழ்ச்சிகளை நடத்தி காட்டிய மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்