மருத்துவ கல்லூரி முதல்வராகசத்தியபாமா பொறுப்பேற்பு
மருத்துவ கல்லூரி முதல்வராக சத்தியபாமா பொறுப்பேற்றார்;
சிவகங்கை
சிவகங்கை மருத்துவ கல்லூரி முதல்வராக இருந்த ரேவதி பாலன் நெல்லை மருத்துவ கல்லூரி முதல்வராக மாற்றப்பட்டார். தஞ்சாவூரில் அறுவை சிகிச்சை தலைவராக இருந்த சத்தியபாமா பதவி உயர்வு பெற்று சிவகங்கை மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து சத்திய பாமா நேற்று முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவருக்கு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி மருத்துவ அலுவலர் முகமது ரபி, கண்காணிப்பாளர் குமாரவேலு, பொது மருத்துவ துறை தலைவர் பாலமுருகன் மற்றும் டாக்டர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.