துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்று கொண்டார்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த கிருத்திகா இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சேலம் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டராக இருந்த முரளி தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.