உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் ஒட்டிய வனப்பகுதியில் அனுமதியின்றி மண் எடுக்க முயற்சிப்பதாக விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர். மேலும் திருப்பூர் அருகே ஏரி மீட்கக்கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர்.

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் ஒட்டிய வனப்பகுதியில் அனுமதியின்றி மண் எடுக்க முயற்சிப்பதாக விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர். மேலும் திருப்பூர் அருகே ஏரி மீட்கக்கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர்.

Update: 2023-02-06 10:55 GMT

திருப்பூர்

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் ஒட்டிய வனப்பகுதியில் அனுமதியின்றி மண் எடுக்க முயற்சிப்பதாக விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர். மேலும் திருப்பூர் அருகே ஏரி மீட்கக்கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர்.

மண் எடுக்க முயற்சி

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக தெரிவித்து முறையிட்டனர். உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

உடுமலை தாலுகா தளி கிராமம் திருமூர்த்திநகரில் பொன்னால அம்மன் சோலைப்பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுக்க கடந்த மாதம் 27-ந் தேதி எந்திரங்களுடன் வந்தனர். இதை அறிந்த விவசாயிகள் ஒன்று கூடி தடுத்து நிறுத்தினர். இது ஆலைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய வனப்பகுதி என்பதால் அரசு தடை செய்யப்பட்ட பகுதியாகும்.

அனுமதி வழங்கக்கூடாது

இந்த பகுதியில் வனத்துறை, ஆர்.டி.ஓ., நீர்வள ஆதாரத்துறை அனுமதி இல்லாமல் மண் எடுக்க வந்துள்ளனர். மண்ணை எடுத்துச்செல்ல பி.ஏ.பி. பாசன திட்ட காண்டூர் கால்வாய் வழியாக கனரக வாகனங்களில் மண் செல்லும்போது தரைப்பாலம் சேதமடைகிறது. எனவே பொதுப்பணித்துறை இதற்கு அனுமதி வழங்கக்கூடாது. இந்த பகுதியில் மண் அள்ள எந்த அனுமதியும் வழங்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

-----------

Tags:    

மேலும் செய்திகள்