அடகு கடைகளில் தாசில்தார் ஆய்வு

அடகு கடைகளில் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2022-09-30 18:45 GMT

திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் உள்ள அடகு கடைகளில் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அடகு கடைகளின் ஆவணங்களை ஆய்வு செய்தார். அடகு கடையில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வட்டி வசூல் செய்யப்படுகிறதா?, நகைகள் உரிய காலத்திற்குள் திருப்பித் தரப்படுகிறதா? என்று அதன் உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து திருவெண்காட்டில் உள்ள தனியார் நர்சரி பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கிராம நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்