பட்டாசு கடையில் தாசில்தார் திடீர் ஆய்வு
வேலூரில் பட்டாசு கடையில் தாசில்தார் திடீர் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பட்டாசு கடைகளில் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் தாசில்தார் செந்தில் இன்று வேலூர்-ஆற்காடு சாலை காகிதப்பட்டறை பகுதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது கடைக்கு உரிமம் உள்ளதா, கடை மற்றும் குடோனில் உள்ள பட்டாசுகளின் இருப்பு விவரங்கள், அவசரகால வழி உள்ளதா மற்றும் தீத்தடுப்பு கருவிகள் பயன்பாடு காலம் முடிவடைந்து விட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கடையின் அருகே வைக்கக்கூடாது என்று கடை உரிமையாளரிடம், தாசில்தார் அறிவுறுத்தினார்.