மேஜைபந்து, கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி
மேஜைபந்து, கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான மேஜைப்பந்து போட்டி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடந்தது. இதில் 17 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நிசாந்த் முதலிடமும், இரட்டையர் பிரிவில் நிசாந்த், பிரேம்குமார் ஆகியோர் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இதே போன்று கோவில்பட்டியில் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டியில்19 வயதுக்கு உட்பட்ட கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி மாணவன் பால்ராஜ் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் யோகன் அ.கற்றார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஹம்ரி மிராண்டா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ், தாளாளர் அகஸ்டின் ஆகியோர் பாராட்டினர்.