கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஊஞ்சல் சேவை

கலவை கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஊஞ்சல் சேவை நடந்தது.

Update: 2023-10-08 18:20 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. முன்னதாக காலையில் மூலவர் கரிவரதராஜ பெருமாளுக்கு பால், சந்தனம், தயிர் போன்ற உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு மகா கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.

தொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் பஜனை பாடல்கள் பாடியபடி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் மங்கள வாத்தியங்களுன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்