அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை

காவேரிப்பாக்கம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை நடந்தது.;

Update: 2023-06-17 18:01 GMT

காவேரிப்பாக்கம் தோட்டக்கார தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து ஊஞ்சலில் வைத்து வழிபாடு நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்