அம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம்
குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் பகுதி அம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி உடையார் வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் குறிஞ்சிப்பாடி சின்னக்கடை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே கந்தகுமாரன் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை யொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் காட்டுமன்னார்கோவில் பெரியகுளம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.