வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
வடுவூர்:
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ரத சப்தமியையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைெபற்றது. முன்னதாக மூலவர் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர் லட்சுமி, நரசிம்மரை ஊஞ்சலில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.