கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் காவலர்களுக்கு நீச்சல் பயிற்சி

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் காவலர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update: 2022-09-06 16:43 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த காவலர் தேர்வில் 200-க்கும் மேற்பட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர்களில் நீச்சல் தெரியாதவர்களுக்கு முதற்கட்டமாக நீச்சல் பயிற்சி அளிப்பதற்காக, பயிற்சி காவலர்கள் 102 பேர் நேற்று காலை கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் அவர்களுக்கு விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசிங்கம், பழனிசாமி ஆகியோர் நீச்சல் குளத்தில் வைத்து, நீச்சல் பயிற்சி அளித்தனர். இவர்களுக்கு அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்ட பிறகு, அவர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியமர்த்தப்படுவார்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்