வியர்வையை வெளியேற்றினால் தோல் ஆரோக்கியமாக இருக்கும்

உடற்பயிற்சி மூலம் வியர்வையை வெளியேற்றினால் தோல் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கு மணி தெரிவித்தார்.

Update: 2023-06-24 20:44 GMT

விருதுநகர், 

உடற்பயிற்சி மூலம் வியர்வையை வெளியேற்றினால் தோல் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கு மணி தெரிவித்தார்.

கருத்தரங்கம்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் உடற்கூறு ஆய்வுத்துறை சார்பில் 'அன்டோஸ்கோப் 2023' என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தோல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற தொடர் மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கினை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தோலுக்கு சிறந்த ஈரப்பதம் வியர்வை தான். அழகு என்பது உடல் நிறத்தில் இல்லை. குணத்தில் தான் உள்ளது. தோலை பராமரிக்க ஆரோக்கியமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். முடிக்கு சாயம் பூசுவது ஆபத்தானது.

உடல் ஆரோக்கியம்

உடற்பயிற்சி செய்வது மூலம் உடலில் இருந்து வியர்வை வெளியேறும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து தோல் பாதுகாப்பு காஸ்மெடிக்ஸ் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் யோகேஷ் சொண்டக்கி, நெல்லை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் சுஜாதா ஆண்ட்ரூ, கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் பத்மாவதி, தோல் நோய் சிகிச்சை நிபுணர் தினேஷ் பொன்ராஜ், நேச்சுரோபதி மருத்துவர் பகத்சிங் ஆகிய மருத்துவநிபுணர்கள் கலந்து கொண்டு பேசினர். தேர்வில் வெற்றி பெற்ற 2-ம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவர் கவுதமுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் துணை முதல்வர் அனிதா மோகன், மருத்துவ கண்காணிப்பாளர் அருண், துணைத்தலைவர் ஜோஸ் ஹேமலதா, துணை கண்காணிப்பாளர் டாக்டர் அன்புவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்