லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர வழிபாடு

திருவாளி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர வழிபாடு நடந்தது.

Update: 2023-09-20 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருவாளி கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இது இந்த பகுதியில் உள்ள பஞ்ச நரசிம்மர் கோவில்களில் ஒன்றாகும். இவரை வணங்கினால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தன்று அவதரித்ததால் ஒவ்வொரு மாதமும் அந்த நட்சத்திர நாளில்ல் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை புரட்டாசி மாத சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி பால், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமி வீதி உலா நடந்தது. இதில் கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் பொற்கொடி, வைணவ அடியார்கள் திரு கூட்ட தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்