கடமலைக்குண்டுவில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்

கடமலைக்குண்டுவில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2023-09-20 21:00 GMT

கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு கடமலைக்குண்டு ஊராட்சி தலைவர் சந்திரா தங்கம் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம், கடமலைக்குண்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பஸ் நிலையம் வரை நடைபெற்றது.

ஊர்வலத்தின்போது, வீட்டிலேயே மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வைத்து, தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது. வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவ-மாணவிகள், தலைமை ஆசிரியர் அழகுசிங்கம், ஊராட்சி செயலர் சின்னச்சாமி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி மற்றும் மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்