பெண் வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கி கைதான பெண் வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Update: 2022-07-22 17:16 GMT

திருவண்ணாமலையை அடுத்த புதுமல்லவாடியில் வருவாய் ஆய்வாளராக ஷாயாஜிபேகம் என்பவர் பணியாற்றி வந்தார்.

கடந்த 20-ந் தேதி முதியோர் உதவித் தொகை வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் இவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று ஷாயாஜிபேகத்தை பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்