அவினாசி-மங்கலம் ரோட்டை சேர்ந்த சிவலிங்கம் மகன் கோவிந்தராஜ் (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள சிற்ப சாலையில் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இதில் மனமுடைந்த கோவிந்தராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.