தபால்காரரிடம் உயிர் வாழ் சான்றிதழைசமர்ப்பித்து பயன்பெறலாம்

ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே தபால்காரரிடம் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-14 13:58 GMT


ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே தபால்காரரிடம் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உயிர் வாழ் சான்றிதழ்

தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது உயிர் வாழ் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதற்கான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது.

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்களின் வீட்டிலேயே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

கைவிரல் ரேகை பதிவு

இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். தங்கள் பகுதி தபால்காரரிடம் தங்களது ஆதார் எண், மொபைல் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் சில நிமிடங்களிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

எனவே ஓய்வூதியதாரர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்