பூட்டி கிடக்கும் சர்வேயர் அலுவலக கட்டிடம்

பட்டுக்கோட்டையில் திறப்பு விழா நடந்து 4 ஆண்டுகளாகியும் பூட்டி்கிடக்கும் சர்வேயர் அலுவலக கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-14 21:00 GMT

பட்டுக்கோட்டை,:

பட்டுக்கோட்டையில் திறப்பு விழா நடந்து 4 ஆண்டுகளாகியும் பூட்டி்கிடக்கும் சர்வேயர் அலுவலக கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வே அலுவலக கட்டிடம்

பட்டுக்கோட்டை நகராட்சி 9-வது வார்டு பாப்பா வெளிபாளையகோட்டையில் தமிழ்நாடு அரசு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சார்பில் குறுவட்ட அளவர் (சர்வேயர்) குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு 14.2.2019-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் திறக்கப்பட்டு 4 ஆண்டுகளாக பூட்டியே கிடைக்கிறது. குடியிருப்பில் யாரும் குடியேறவில்லை. குறுவட்ட அளவர் அலுவலகம் பட்டுக்கோட்டை நகருக்குள்ளே இயங்கி வருகிறது.

புதர்மண்டி கிடக்கிறது

புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாததால் கட்டிடத்தை சுற்றி காடு போல் புதர்கள் மண்டி பாழடைந்து கிடக்கிறது. பட்டுக்கோட்டை நகராட்சி 9-வது வார்டு பகுதி ரேஷன் கடைக்கு இடம் இல்லாமல் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க 2 கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் அலைய வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே 9-வது வார்டு பகுதிநேர ரேஷன் கடைக்கு பயன் இல்லாமல் பூட்டிக் கிடக்கும் குறுவட்ட அளவர் (சர்வேயர்) அலுவலக கட்டிடத்தை ஒதுக்கித்தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்