நிலங்களை அளவிடும் பணி
வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி நடந்தது.
வேதாரண்யம்:
தமிழ்நாடு முழுவதும் கோவிலுக்கு சொந்தமான இடங்களை 2021- ம் ஆண்டு செப்டம்பர் முதல் அளவிடும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கடிநெல்வயல் பகுதியில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி நடந்தது. நாகை தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) அமுதா தலைமையில் அளவிடும் பணி நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் அறிவழகன் கோவில் நில அளவையர் விக்னேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.