வேட்டவலத்தில் நடைபெறும் பணிகள் ஆய்வு
வேட்டவலம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.
வேட்டவலம்
வேட்டவலம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.
வேட்டவலம் பேரூராட்சிக்குட்பட்ட எள்ளுபிள்ளையார் குளம், சமுத்திரம் எரி ஆகிய இடங்களில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ 25.50 லட்சம் மதீப்பிட்டில் நீர்நிலை மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. மேலும் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் வேட்டவலம் பிடாரன் கொட்டாய் செல்லும் சாலையில் தார் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளை பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் அம்சா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செயல் அலுவலர் சுகந்தி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகையன் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.