சங்கரநாராயண சுவாமி கோவில் நிலங்கள் அளவிடும் பணி
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் நிலங்கள் அளவிடும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தெற்கு சங்கரன்கோவில், களப்பாகுளம், வடக்கு புதூர், வீரசிகாமணி, கீழ வீரசிகாமணி, வாடிக்கோட்டை, மணலூர், கரிவலம்வந்தநல்லூர், சாயமலை, திருவேங்கடம், வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் உள்ளன. இதில், 4,200 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் நவீன சோலார் கருவியை பயன்படுத்தி அளவீடு செய்யப்படுகிறது.
அவற்றில் `இந்து அறநிலையத்துறை' என சிவப்பு எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட சிமெண்டு பில்லர்கள் நடும் பணியானது நில அளவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் தென்காசி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் கோமதி, மாவட்ட ஆலய நிலங்கள் தனி தாசில்தார் பூதத்தான் ஆகியோர் பார்வையிட்டனர்.