ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு
கணியம்பாடியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த பாலாத்துவண்ணான் ஊராட்சியில் நடைபெற்று வரும் குளம் தூர்வாரும் பணி, பள்ளி வகுப்பறை கட்டுமான பணி மற்றும் அங்கன்வாடி மைய கட்டிட பணி உள்ளிட்டவைகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதேபோல் கம்மசமுத்திரம் மற்றும் கனிகனியான் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி, ஒன்றிய பொறியாளர் கவிதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேசன், முருகேசன், ஏழுமலை,
ஊராட்சி செயலாளர்கள் குணசேகரன், நந்தகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.