தாணிக்கோட்டகம் ஊராட்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
தாணிக்கோட்டகம் ஊராட்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் ஊராட்சிக்குட்பட்ட சின்னதேவன்காடு, சேக்குட்டிதேவன்காடு பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் புகார் கொடுத்தார். அதன்பேரில் தாணிக்கோட்டகம் ஊராட்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேக்குட்டிதேவன் காடு பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்களை பார்வையிட்டு அந்த பகுதி மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், கிராம நிர்வாக அலுவலர் அருள் உள்பட பலர் உடன் இருந்தனர்.