தரிசு நிலங்களில் பராமரிப்பு பணிகள் ஆய்வு
தரிசு நிலங்களில் பராமரிப்பு பணிகள் ஆய்வு செய்தனர்.
தோகைமலை அருகே வடசேரி ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தரிசு நிலங்களில் மா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. இதனை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காய்கறி விதைகளை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கினார். இதில், தோகைமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி, தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, வடசேரி ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன், மாவட்ட பிரதிநிதிகள், விவசாய குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.