கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நில நிர்வாக ஆணையர் ஆய்வு

கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நில நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார்.

Update: 2023-02-01 11:32 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நில நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார்.

சென்னை நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன் கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகம் வந்தார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் எம்.பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, தாசில்தார் சக்கரை ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

பின்னர் தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், அனைத்து விதமான சான்றிதழ்கள், நிலுவையில் உள்ள கோப்புகள் மற்றும் அனைத்து பொருள்கள் குறித்தும் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஆய்வு செய்தார். அப்போது விளிம்பு நிலையில் உள்ள ஏர்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பூம்பூம்மாடு இனத்தவர் உள்பட 17 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களையும், 3 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும் அவர் வழங்கினார்.

முன்னதாக தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்றையும் ஆணையர் நாகராஜன் நடவு செய்தார். பின்னர் ஏர்ப்பாக்கம் கிராமத்தில் பூம்பூம் மாடு வளர்க்கும் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா பெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய ஆணையர் நாகராஜன் விரைவில் வீடு கட்டி குடியேறுமாறு பயனாளிகளிடம் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்