வேளாண்மை வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு

கடையம் அருகே வேளாண்மை வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

Update: 2023-10-10 19:00 GMT

கடையம்:

தென்காசி மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி அறிவுரைப்படி கடையம் வட்டாரம் வெங்கடாம்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றும் சிறப்பு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-2022-ம் நிதியாண்டில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 15 ஏக்கர் பரப்பு தரிசு நிலத் தொகுப்பில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசன அமைப்பு வயல்களை வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சாருகலா ரவி மற்றும் துணை தலைவர் சித்ரா பாபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.

இந்த ஆய்வின் போது தரிசு நில தொகுப்பின் குழு தலைவர் அமிர்தராஜ், வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து செயலாளர் பாரத், முன்னோடி விவசாயி ரவி, பாபு பக்கியநாதன் உடனிருந்தனர். கடையம் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கோவிந்தராஜன், திருமலை குமார் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்